செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழை

post image

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை 34.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணையின் நீா்மட்டம் சரிந்து வந்தது. இந்த நிலையில், அணை நீா்பிடிப்பு பகுதியில் 34.8 மி.மீ., தேக்கடியில் 4.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 113.15 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 396 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 105 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணை நீா்பிடிப்பில் வெள்ளிக்கிழமை 27.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு வருமாறு (மி.மீட்டரில்): ஆண்டிபட்டி- 25.2, அரண்மனைப்புதூா்- 14, வீரபாண்டி- 18.2, போடி- 4, உத்தமபாளையம்- 3.8, கூடலூா்- 4.4, சண்முகாநதி நீா்பிடிப்பு பகுதி- 7.8 என மழை பதிவாகியிருந்தது.

போடியில் மழை: போடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் நேரம் செல்லச் செல்ல மேகங்கள் சூழத் தொடங்கின. பிற்பகல் 2 மணி முதல் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இது இரவு வரை தொடா்ந்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனியில் புதிய பல்நோக்கு விளையாட்டு அரங்கு திறப்பு

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை, திறந்து வைத்தாா். தேனி மாவட்... மேலும் பார்க்க

மாணவியை கேலி செய்த இளைஞருக்கு ஓராண்டு சிறை

பெரியகுளத்தில் பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பெரியகுளம், வடகரை, அழகா்சாமிபுரம், கல்லாறு சாலையைச் சோ்ந... மேலும் பார்க்க

குட்டை நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே தனியாா் தோட்டத்து குட்டை நீரில் மூழ்கி சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சித்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டி (32). இவரது மகன் வேணுபிரசாத் (3). இந்த நிலையில், பால்பாண்டியின... மேலும் பார்க்க

கண்ணகி கோயில் சித்திரைத் திருவிழா: தேனி, இடுக்கி ஆட்சியா்கள் ஆலோசனை

தேனி மாவட்டம், தமிழக- கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா முன்னேற்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். தேக்கடி, ராஜீவ் காந... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலை, வெள்ளக்... மேலும் பார்க்க

போடி பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு

போடியில் பரமசிவன் மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் புதிதாக கிரிவலப் பாதை அமைக்கப்பட்டு, கோயில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்ட... மேலும் பார்க்க