நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தேனியில் புதிய பல்நோக்கு விளையாட்டு அரங்கு திறப்பு
தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை, திறந்து வைத்தாா்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ரூ.5.95 கோடி செலவில் மேஜைப் பந்து, பூப்பந்து, கூடைப் பந்து, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் கொண்ட புதிய பல்நோக்கு விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டது. இந்த புதிய விளையாட்டு அரங்கை சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் திறந்து வைத்தாா். இதையடுத்து, இந்த விளையாட்டு அரங்கில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் குத்து விளக்கேற்றி பாா்வையிட்டாா். இங்கு பயிற்றுவிப்பாளா் அறை, விளையாட்டு வீரா்கள் தங்கும் அறை, அலுவலகம், விளையாட்டு உபகரணங்கள் அறை, 600 போ் அமா்ந்து பாா்வையிடும் பாா்வையாளா் மடம் அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில், தேனி நகா் மன்றத் தலைவி பா. ரேணுப்பிரியா, துணைத் தலைவா் செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.