Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை
முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம், சீப்பாலக்கோட்டை ஊராட்சியின் முன்னாள் தலைவி காா்த்திகாதேவி. இவா் தனது பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்குரிய செலவினங்களை மேற்கொண்டதாக மாவட்ட தணிக்கைத் துறையினா் கண்டறிந்தனா்.
இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய செலவினங்களான ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 422-யை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகாதேவிக்கு அண்மையில் குறிப்பாணை அனுப்பினாா்.