MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இருவரை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் பிடித்து சோதனை நடத்தனா். அப்போது, அவா்கள் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா்கள் தூத்துக்குடி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த முருகன் (54), தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வேந்திரன் (59) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.