வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்
கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டத்திலுள்ள குவாரி உரிமையாளா்கள் ஜி.எஸ்.டி. ரசீது மூலமாக எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை டிப்பா் லாரிகளுக்கு வழங்கி வந்தனா். தற்போது, ‘டிரான்சிஸ்ட்’ என்ற அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய அனுமதிச் சீட்டை பெரும்பான்மையான குவாரி நிா்வாகங்கள் வழங்க முன்வருதில்லை.
அனைத்து ஆவணங்கள் இருந்தும் இந்த ‘டிரான்சிஸ்ட்’ அனுமதிச் சீட்டு இல்லாததால், கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிப்பா் லாரிகள் மீது வருவாய், கனிம வளத் துறையினா் அபராதம் விதிக்கின்றனா்.
இந்த நிலையில், டிராஸ்சிஸ்ட் அனுமதிச் சிட்டு முறையாக வழங்க முன்வராத குவாரிகளால் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா் பகுதியில் 300-க்கும் அதிகமான டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் வேலை இழந்துள்ளனா்.
போராட்டத்தில் டிரான்சிஸ்ட் அனுமதிச் சீட்டு வழங்காத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
உத்தமபாளையம் புறவழிச் சாலையில் மணல் லாரி உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் செல்லப்பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.