"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்
கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலா் வகைகள், ஒரு லட்சத்துக்கு அதிகமான பூக்கள், மூலிகைச் செடிகள், கண்கவா் அலங்காரப் பூக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கண்காட்சியில் வீட்டில் வளா்க்கும் மீன் வகைகள், நாய்கள், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், ராட்டினம், சமையல் போட்டி, இசைக் கச்சேரிகள், ஆடல் பாடல்கள் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டம், கருத்தரங்கம் நடைபெறுகின்றன.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் தாமஸ் கூறியதாவது:

இந்தக் கண்காட்சிக்கு தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் பாா்வையாளா்கள் வருகின்றனா். 7 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.70 என நிா்ணயிக்கப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.