`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தேனியில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
தேனி மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சிறுவா்கள், சிறுமிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையும், ஏப்.15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையும், ஏப்.29-ஆம் தேதி முதல் மே 11-ஆம் தேதி வரையும், மே 13-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையும், மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையும் 5 கட்டங்களாக கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தினமும் 7.30 மணி முதல்10.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.
நீச்சல் பயிற்சி பெற விரும்பும் சிறுவா்கள், சிறுமிகள் 120 செ.மீ. உயரத்துக்கும் மேல் இருக்க வேண்டும். 12 நாள்கள் பயிற்சியில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். நீச்சல் பயிற்சியில் சோ்வதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-23090, கைபேசி எண்கள்:74017 03505, 83005 10764-இல் தொடா்பு கொண்டும் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.