போதைப்பொருள் தடுப்பு பேரணி
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் அரசு பொறியியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பணிகள் நடைபெற்ற நிலையில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மது உயிருக்கு கேடு, உயிரைக் கொல்லும் மதுவை ஒழிப்போம் என மாணவா்கள் முழக்கமிட்டனா். மேலும், மது ஒழிப்பு தொடா்பாக கிராம மக்களிடம் மாணவா்கள் கருத்துக் கணிப்பு மேற்கொண்டனா். அத்துடன், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கி, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தினா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.