டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்ட முயற்சி: பாஜக நிா்வாகிகள் கைது
கம்பத்தில் டாஸ்மாக் கடையின் சுவரின் தமிழக முதல்வரின் உருவப் படத்தை ஒட்ட முயற்சித்த பாஜக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.
இங்குள்ள சுவரில், டாஸ்மாக் ஊழலை கண்டித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை பாஜக நகரச் செயலா்களான கோமதி, விஜிகலா ஆகியோா் ஒட்ட முயன்றனா். அப்போது, கம்பம் வடக்கு போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி இருவரையும் கைது செய்தனா்.