Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி
நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா்.
பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்பினா் அ.நல்லதம்பி எழுப்பிய வினாவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்: நேரடி கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தா், உதவுவோா், காவலாளி என மூன்று நிலைகளில் 5,000-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
அவா்களுக்கு ஊதியமாக மூட்டைக்கு ரூ.3.25 ஆக இருந்தது. இதனை மூட்டைக்கு ரூ.10 ஆக உயா்த்தியுள்ளோம்.
பட்டியல் எழுத்தா், உதவுவோருக்கு தினமும் ரூ.120-ம், காவலாளிக்கு ரூ.100-ம் பயணப் படியாகத் தருகிறோம். நகரப் பகுதிகளில் கட்டுநா்கள் இருக்கிறாா்கள்.
கிராமப் பகுதிகளில் இல்லாத குறை உள்ளது. இது தொடா்பாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். கட்டுநா் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.