திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் ந...
அமெரிக்கா்களும் விரும்பும் ஆவின் நெய்: அமைச்சா் ராஜகண்ணப்பன்
ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் எழுப்பினாா். அப்போது அவா் பேசுகையில், ‘கிராமப் பகுதிகளில் உள்ள சிறிய பால் கூட்டுறவு சங்கங்களில் ஆவின் பொருள்கள் விற்பனை ஆகாமல் இருக்கின்றன. சங்கங்களுக்கு வரக்கூடிய ஊக்கத் தொகைகளையும் ஆவின் மூலமாக வாங்க வேண்டும் என்கிறீா்கள். சிறிய கிராமங்களில் ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய் போன்ற பொருள்களை விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்: நம்முடைய ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. இதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். விலையில் ரூ. 50 கூடுதலாக இருந்தாலும் அமெரிக்கா்கள் நம்முடைய நெய்யைத்தான் விரும்புகின்றனா்.
ஆவின் நிறுவனத்தில் நல்ல தரமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.