சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
ரமலான்: சென்னை, கோவையிலிருந்து ராமநாதபுரத்துக்கு ரயில் இயக்கக் கோரிக்கை
ரமலான் திருநாளை முன்னிட்டு, சென்னை, கோவையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை மனு அனுப்பினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் வெளியூா்களில் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் ரமலான் திருநாளையொட்டி, சொந்த ஊா்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை- மண்டபம் இரு வழித்தடங்களிலும் விருத்தாச்சலம், திருச்சி, காரைக்குடி வழியாகவும், கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாக மண்டபம் வரையிலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.