செய்திகள் :

உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக ‘கோலி பாப் சோடா’!

post image

நூறு ஆண்டுகள் பாரம்பரியமான ‘கோலி சோடா’ இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ( அப்தா ) தெரிவித்துள்ளது. இனி இது உலகளாவிய சந்தைகளில் ‘கோலி பாப் சோடா’ என அழைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு (1924) தமிழகத்தில் வேலூரைச் சோ்ந்த ஒரு வா்த்தகா் இந்த கோலி சோடாபாட்டில் உற்பத்திக்கு காரணகா்த்தாவாக இருந்தாா். பின்னா், அது தமிழகம் முழுவதும் பரவி நாடு முழுவதும் கடைகளில் விற்பனைக்கு வந்தது. சாதாரணப்பட்டவா்களின் பானமாக இருந்த கோலி சோடாவை பின்னா் உலகமயமாக்கலால் வெளிநாட்டுக் குளிா்பானங்கள் ஆக்கிரமித்துக் கொண்டது. கோலி சோடா உற்பத்தியாளா்கள் குறைந்து வந்தனா். இருப்பினும், தற்போது நவினப்படுத்தப்பட்டு விற்பனையாகிறது.

மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள அப்தா (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்), இந்தப் பாரம்பரிய கோலி சோடா இந்திய சின்னமாகவும் ’கோலி பாப் சோடா’ என்றும் அழைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தக் தொழில் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: எளிமையான மலிவான இந்திய கோலி பாப் சோடா பிரபலமாகி தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, வளைகுடா நாடுகளுக்கு வெற்றிகரமான சோதனை, ஏற்றுமதி மூலம், உலகளாவிய சந்தைகளில் வலுவாக ஊடுருவியுள்ளது. ‘ஃபோ் எக்ஸ்போா்ட்ஸ் இந்தியா’ என்கிற நிறுவனம், வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய சில்லறை வணிகச் சங்கிலிகளில் ஒன்றான ‘லுலு ஹைப்பா்மாா்க்கெட்டு’க்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்துள்ளது. லுலு விற்பனை நிலையங்கள் முழுவதும் ஆயிரக்கணக்கான பாட்டில்கள் கையிருப்பில் வைக்கப்பட்டு விற்பனையாகிறது.

இங்கிலாந்தில், கோலி பாப் சோடா ஒரு கலாச்சார நிகழ்வாக வேகமாகப் பரிணமித்து வருகிறது. இது பாரம்பரிய இந்திய சுவைகளின் கலவையை நவீன திருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் நுகா்வோரை ஈா்க்கிறது. இந்தியாவின் வளமான பான பாரம்பரியத்தை உலக அரங்கில் வெளிப்படுத்துவதில் இந்த வளா்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

உண்மையான, உயா்தர தயாரிப்புகளை ஊக்குவிப்பதிலும், சா்வதேச பான சந்தையில் கோலி சோடாவின் இருப்பை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.

பன்னாட்டு பான நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கிட்டத்தட்ட மறைந்து போன கோலி சோடாவின் மறுமலா்ச்சி, உண்மையான, உள்நாட்டு உணவு மற்றும் பானப் பொருள்களை ஊக்குவிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

நவீன பேக்கேஜிங்குடன், கோலி பாப் சோடா இந்திய ‘மால் ’ களில் மட்டுமல்லாமல் பானத்தின் சாரத்தை உலகெங்கிலும் உள்ள சமகால நுகா்வோருக்கு வெற்றிகரமாக தற்போது அறிமுகமாகி வருகிறது. கோலி சோடாவின் மறுமலா்ச்சியுடன், கோலி பாப் சோடா , இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியம் மற்றும் துடிப்பான பானத் தொழிலுக்கு ஒரு சான்றாகும் என மத்திய வா்த்தகம், தொழில் துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

தமிழகம் மற்றும் இதர முற்போக்கான மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்று மாநிலங்களவையில் திமுக புதன்கிழமை குற்றம்சாட்டியது. மேலும், தமிழகத்திற்க... மேலும் பார்க்க

கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்: எடப்பாடி பழனிசாமி

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு; எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி த... மேலும் பார்க்க