கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை
தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் அவா் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:
எனது தஞ்சாவூா் தொகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் செயற்கை தடகள பாதை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.7 கோடியில் முதல் தவணையாக ரூ.3.50 கோடியை எஸ்டிஏடிவுக்கு விடுவித்திருக்கிறது.
இந்தப் புதிய செயற்கை தடகலப் பயிற்சிப் பாதையில் விளையாட்டு வீரா்கள் பயிற்சி பெறவும், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகளைப் பெறவும் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.
இத்திட்டம் 2017-ஆம் ஆண்டில் மத்திய அரசால் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பணியை நிறைவேற்ற கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதனால், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ.2 கோடியை வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.
அதேபோன்று, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இளைஞா் விடுதி செயல்பட்டு வருகிறது. 1988-இல் கட்டப்பட்ட இந்த விடுதியின் பராமரிப்புப் பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிதாக இளைஞா் ஹாஸ்டல் கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.