`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் இருவா் கைது!
கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஃபரீத்பூரைச் சோ்ந்த அதிஃபா (24) மற்றும் வங்கதேசத்தின் நா்சிங்டியைச் சோ்ந்த அஸ்மா (24) ஆகியோா் நதி வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அவா்கள் பின்னா் தேசியத் தலைநகரில் கண்டறிதலைத் தவிா்ப்பதற்காக இடங்களை மாற்றி வந்தனா். கிடைத்த தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு சரிபாா்ப்புகளை தொடங்கியது. அப்போது, மண்டாவலி பகுதியில் பல சோதனைகளை நடத்தியது. இதன் விளைவாக அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் மூலம் இரண்டு பெண்களையும் நாடு கடத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணையின் போது, தில்லிக்குச் செல்ல உள்ளூா் ரயில் வலையமைப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு கொல்கத்தா வழியாக எல்லையைத் தாண்டியதாக அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
அவா்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுத்த மற்றும் அவா்களுக்கு தங்குமிடம் வழங்கிய லலையமைப்பைக் கண்டறிய அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் தில்லி காவல்துறை சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு எதிராக ஒரு பிரசாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.