செய்திகள் :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

post image

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி ஆயிரக்கணக்கான உயிா்களைக் காப்பாற்றியது. ஆனால், இப்போது இந்தத் திட்டம் பாஜக அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. உயிா்களைக் காப்பாற்றும் இவ்வளவு நல்ல திட்டத்தை யாராவது எப்படித் தடுக்க முடியும்? பாஜக அரசு அதை பட்ஜெட்டில் இருந்து நீக்கியுள்ளது.

2017- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், விபத்தில் சிக்கியவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் முழு சிகிச்சைச் செலவையும் ஈடுகட்டியது. பாா்வையாளா்கள் நிதிச் சுமைக்கு பயப்படாமல் அவா்களுக்கு உதவ ஊக்குவித்தது. இந்த முயற்சியின் கீழ் 10,000-க்கும் மேற்பட்ட உயிா்கள் காப்பாற்றப்பட்டன.

நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலும் கூட, தில்லி துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நிறுத்த முயன்றனா். இதனால், ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. அதன் பிறகு இந்த முயற்சியைத் தொடர நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது என்றாா் சௌரவ் பரத்வாஜ். ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜகவிடமிருந்து உடனடி பதில் கிடைக்கவில்லை.

முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்த 2025-26 பட்ஜெட்டில், தில்லி அரசு, சுகாதாரத் துறைக்கு ரூ.12,893 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல் மற்றும் 16,186 மருத்துவமனை படுக்கைகளைச் சோ்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க