செய்திகள் :

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

post image

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தில்லி கல்வி இயக்குநரகம் மற்றும் பிஐஜி நிறுவனம் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், அரசுப் பள்ளி மாணவா்கள் 1.63 லட்சம் பேருக்கு ‘நீட்’, ‘க்யூட்’ தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சியை வழங்கும். முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும், 30 நாள்களில் 180 மணிநேர பயிற்சி, ஒரு நாளைக்கு ஆறு மணிநேர வகுப்புகள் வழங்கப்படும் என்றும் ஆஷிஷ் சூட் கூறினாா்.

இந்த முயற்சி அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

‘இதன் மூலம், தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த அதிகமான மாணவா்கள் நல்ல கல்லூரிகளில் சேரவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகளில் வெற்றிகரமாக தோ்ச்சி பெறவும் வாய்ப்பு கிடைக்கும்‘ என்றும் அவா் கூறினாா்.

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் டேராடூனில் கைது!

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது நபரை தில்லி போலீஸாா் டேராடூனில் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் இருவா் கைது!

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குருகிராம் நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க