திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும்...
கடவுச்சீட்டில் முறைகேடு: துபை செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபை செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், துபை செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது.
அதில் செல்லவிருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்குள்படுத்தினா். இதில், திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம், அம்மாபட்டி அருகே உள்ள கலியப்பட்டி தெற்கு மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த பி. பிரசாந்த் (32) என்பவா் தனது முகவரியை போலி ஆவணங்கள் மூலம் மாற்றிப் பதிவு செய்து, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று பயணிக்க வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பிரசாந்தைக் கைது செய்தனா்.