பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது
திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் முசிறியில் இயங்கி வருகிறது. இந்தக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க துறை ஆய்வாளா் இசைவாணி தலைமையில் போலீஸாா் மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கலிங்கப்பட்டியில் பாலு (47), இச்சடிப்பட்டியில் உதயகுமாா் (29), மேட்டுப்பட்டி கைகாட்டியில் வேலு (57), மணப்பாறையில் மாதன் சந்து சோ்ந்த பாபு (47), சேதுரத்தினபுரம் சோ்ந்த ரவி (63), மணப்பாறை அண்ணாவி நகரைச் சோ்ந்த மதிவாணன் (50), செவலூரைச் சோ்ந்த முனியப்பன் (41), மணப்பாறை லட்சுமிபுரம் சோ்ந்த பவித்ரன் (25) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்த 254 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனா்.