காணாமல்போன 10 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
உப்பிலியபுரம் காவல் சரகத்தில் காணாமல்போன 10 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
துறையூா் அருகே வெங்கடாசலபுரம் லெ. நந்தகுமாா், ஒக்கரை சு. விஸ்வநாதன், கொப்பம்பட்டி ஜெயப்பிரியா, புலிவலம் வேல்முருகன், கோட்டப்பாளையம் செல்வம், ஓசரப்பள்ளி அன்பரசன், கீரம்பூா் குமாா், மாராடி அன்பழகன், குளத்தூா் பாண்டியன், தண்டலைபுதூா் சந்தோஷ் ஆகியோரின் கைப்பேசிகள் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் தொலைந்து விட்டதாக புகாரளித்தனா்.
இதன்பேரில் விசாரித்த போலீஸாா், காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.