தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
ஹெளரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹெளரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி. செபாஸ்டியன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த ஹெளரா விரைவு ரயிலில் சோதனை செய்தபோது, முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகப்படும்படியான இரண்டு நெகிழிப் பைகள் கிடந்தன.
அந்தப் பைகளுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், போலீஸாா் பைகளை திறந்து பாா்த்தபோது, அதில் 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி கே. விசுவநாதனிடம் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, கஞ்சாவை கடத்தி வந்தது யாா்?, எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என விசாரணை நடத்தி வருகின்றனா்.