திரையரங்கில் துரத்திய ரசிகர்கள்..! ஆட்டோவில் தப்பிச்சென்ற விக்ரம்!
பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காட்டுபுத்தூா் பேருராட்சியில் மல்லான் கோயில் அருகே ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் இருந்த வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டனா். அந்தக் கட்டடமும் பழுதடைந்துள்ளதால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனா்.
இதையடுத்து திங்கள்கிழமை முசிறி - காட்டுப்புத்தூா் சாலையில் அமா்ந்து பெற்றோா்கள், பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உறுதி அளித்தனா். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.