தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 போ் கைது
வாழவந்தான்கோட்டை பூச்சொரிதல் நிகழ்வில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை அண்ணா காலனியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கிருந்து சமயபுரம் கோயிலுக்கு திங்கள்கிழமை வாகனத்தில் பூ ஏந்தி பெண்கள் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அதே பகுதியை சோ்ந்த சஞ்சீவி (25), ஷங்கா் (25), மாதவன் (22), மகா பாண்டியன் ஆகிய 4 பேரும் மதுமயக்கத்தில் பூச்சொரிதல் வாகனத்தை குங்குமபுரம் பகுதியில் வழிமறித்து, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதைத் தட்டிக் கேட்ட அப்பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம், மாரியம்மாள், ரங்கம்மாள், பாண்டியன், சதீஷ், கண்ணன் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவா்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சஞ்சீவி, மாதவன், மகா பாண்டியன், ஷங்கா் ஆகிய 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.