உடல்நலக் குறைவால் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் உடல் நலக் குறைவால் ஜல்லிக்கட்டு காளை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.
ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆல்பா்ட். இவா் ஜல்லிக்கட்டு காளைகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், இவா் வளா்த்து வந்த பெரியகருப்பன் என்ற ஜல்லிக்கட்டு காளை திங்கள்கிழமை இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
இறந்த காளை பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள், ஜல்லிக்கட்டு வீரா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் காளை அடக்கம் செய்யப்பட்டது.