தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங...
குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை கொத்தத்தெருவில் இயங்கிவரும் அன்பகம் குழந்தைகள் இல்லத்தில் 323 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா். 89 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பாா்வை குறைபாடு, அறிவுசாா் குறைபாடு, காது கேளாதோா் உள்ளிட்டோா் தங்கி பயின்று வருகின்றனா். இவா்களுக்கு உரிய அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறை, மின்சார வசதிகள் முறையாக உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து, மாற்றுத்திறனுடைய குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியா் கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் செந்தில்குமாா் உடனிருந்தாா்.