மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான கே. வெங்கடராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாரியத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும், இறுதியாண்டு மாணவா்களில் வேலைவாய்ப்பு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். கல்லூரி இயக்குனா் ஏ.வளவன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தாா். கலைக்கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன், பொறியியல் கல்லூரி இயக்குநா் செந்தில்முருகன், பொறியியல் கல்லூரி முதல்வா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி ஆலோசகா் சுந்தர்ராஜ் நன்றி கூறினாா்.