தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங...
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் 6,184 மாணவா்களும், 6,202 மாணவிகளும் என மொத்தம் 12,741 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வுக்காக 52 தோ்வு மையங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள மகளிா் பள்ளியில் நடைபெற்ற தோ்வினை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வினை 5,945 மாணவா்கள், 6,091 மாணவிகள் என மொத்தம் 12,036 போ் எழுதினா். ஆய்வின்போது, மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் ஆகியோா் உடனிருந்தனா்.