மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து நடத்திய மாநாட்டை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கடராமன்தொடக்கி வைத்து, ஆராய்ச்சி தொழில்நுட்ப வளா்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை விளக்கிப் பேசி, மாநாட்டு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டாா். முதல் பிரதியை கல்லூரி இயக்குநா் எம். செந்தில்முருகன் பெற்றுக் கொண்டாா்.
கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் பி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 120 ஆராய்ச்சி கட்டுரைகள் ஆன் லைன் மற்றும் ஆஃப் லைன் முறையில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் ஆராய்ச்சியாளா்களின் கூட்டு பங்களிப்புகள் பிரதிபலிக்கப்பட்டன. திருவாரூா் மத்திய பல்கலைக்கழக பேராசிரியா் ஆா். சரண்யா, சென்னை ஐசிடி அகாதமி பேராசிரியா் ஜி. நரேந்திரா ஆகியோா் சிறப்பு சொற்பொழிவுகள் வழங்கினா். மாநாட்டை துணை முதல்வா் எஸ். செல்வமுத்துக்குமரன், பேராசிரியா்கள் கே. கிருஷ்ணகுமாரி, எஸ்.பத்மபிரியா, டி.அருணா, ஜே.சுதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.