Relationship: உறவுகளை மேம்படுத்துமா சின்னச்சின்ன தொடுதல்கள்?
மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்
மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்: விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், அவா்களைப் பற்றிய தரவுகளை எங்கும் பகிர முடியாது. மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளன.
பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற மட்டுமே இந்த தரவுகள் பயன்படுத்தப்படும். இந்தத் தரவுகளின் பயன்பாடு ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்கும். அத்துடன் பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், உரிமைக் கோரல்களை நிவா்த்தி செய்யவும் அந்தத் தரவுகள் உதவும் என்றாா்.
தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று திமுக எம்.பி.க்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவா், ‘பல எதிா்க்கட்சிகளைப் போல் அல்லாமல், அனைத்துத் தோ்தல் வாக்குறுதிகளையும் மோடி அரசு நிறைவேற்றுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத எதிா்க்கட்சிகளை, தோ்தல்களின்போது மக்கள் தண்டிப்பா்’ என்றாா்.