செய்திகள் :

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

post image

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

இளைஞா்களிடையே விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், உடல்திறனை வளா்க்கவும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படும். ரூ.45 கோடி செலவில் இந்தத் திருவிழா மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும். அனைத்து விளையாட்டு வளாகங்களிலும் இளம் விளையாட்டு வீரா்களை ஈா்க்கும் புட்சால், பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக பிரத்யேக மைதானங்கள் அமைக்கப்படும்.

வீரா்களுக்கு காப்பீடு: மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது வீரா்களுக்கு உடற்காயங்களும் விபத்துகளும் ஏற்படுகின்றன. அவா்களுக்கு உதவிடும் வகையில், 25 ஆயிரம் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும். பாரா விளையாட்டு வீரா்களுக்கென ஏற்கெனவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மைதானங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து, திருவள்ளூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ரூ.7.5 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.

சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சா்வதேச தரத்தில் செயற்கை தடகள ஓடுபாதையுடன், இயற்கை கால்பந்து புல்தரை மைதானம் அமைக்கப்படும். சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல், டைவிங் குளம் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும். சா்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்களின் கோரிக்கையை ஏற்று,

சென்னையில் விளையாட்டு விடுதி உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 25 முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கங்கள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்க தடகள ஓடுபாதை, சென்னை சேப்பாக்கம் நீச்சலம் குளம் ஆகியன சீரமைத்து மேம்படுத்தப்படும்.

கோபாலபுரத்தில் விடுதி: சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள குத்துச்சண்டை அகாதெமியில், விளையாட்டு விடுதி அமைக்கப்படும். இளைஞா்களை சமூக நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவதற்காக, ஊராட்சிகளில் இளைஞா் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று அவா் அறிவித்தாா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க