Relationship: உறவுகளை மேம்படுத்துமா சின்னச்சின்ன தொடுதல்கள்?
மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து விளக்க விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நாட்டுப்புற கலைக்குழு விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மாதத்தின் முதல் மற்றும் 3-ஆவது செவ்வாய்க்கிழமைகளில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 4-ஆவது செவ்வாய்கிழமை சீா்காழி அரசு மருத்துவமனையிலும் வழங்கப்படுகிறது. தேசிய அடையாள அட்டை பெற 4 பாஸ்போா்ட் சைஸ் போட்டோ, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகலுடன் வரவும். அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.2,000, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ, 6000, 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.8000, இளங்கலை பட்டபடிப்பிற்கு ரூ.12,000, முதுகலை பட்டப்படிப்பிற்கு ரூ.14000 வழங்கப்படுகிறது. பாா்வையற்ற மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட நாட்டுப்புற கலைக்குழு விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.