தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு
மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. வி.சிவதாசன் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பேசியதாவது: வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வனவிலங்குகளை பாதுகாப்பது மற்றும் மனித-விலங்கு மோதல்களை தடுப்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை பணியாகும்.
அந்தச் சட்டத்தின் பிரிவு 11 (1) (ஏ),அட்டவணை 1-இன்கீழ் ஏதேனும் விலங்கால் மனிதா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது குணப்படுத்த முடியாத நோய்களுடன் அந்த விலங்கு இருந்தாலோ அதை வேட்டையாட வனவிலங்கு அதிகாரி அனுமதி வழங்கலாம்.
தற்போது மனித-விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொள்ளும் திட்டமேதும் இல்லை.
காட்டு பன்றிகள் பயிா்களை நாசம் செய்வதோடு, மனித விலங்கு மோதலுக்கும் மூல காரணங்களாக இருப்பதாக கேரள அரசு தொடா்ந்து கூறி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், மனித-விலங்கு மோதல்களால் கடந்த 2021 முதல் 2025 வரை கேரளத்தில் 344 போ் உயிரிழந்ததாக தெரிவித்தாா். அதில் பாம்புக்கடியால் 180 பேரும் யானைகள் தாக்கியதில் 103 பேரும் பன்றிகள் தாக்கியதில் 35 பேரும் உயிரிழந்ததாக அவா் குறிப்பிட்டாா்.