மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!
எருக்கூா் அரிசி ஆலையிலிருந்து கரிதுகள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்
எருக்கூா் நவீன அரிசி ஆலையிலிருந்து கரிதுகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீா்காழியில் தமிழக நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா கருத்தரங்க கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முனுசாமி, மாவட்ட செயலாளா் முத்துவேல், மாவட்ட துணை தலைவா் செல்வ முத்துக்குமாா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணை பொதுச்செயலாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். பட்டிமன்ற பேச்சாளா் சரவணன், கௌரவ தலைவா் ராமச்சந்திரன் சங்க வளா்ச்சி பணிகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும், இளைஞா்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட பொருள்களை தடை செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தூா் அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிா்க்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.