தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங...
சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு
சீா்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் உள்ள சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலை அக்னி கொப்பரை சக்தி கரகத்துடன் பச்சைக்காளி, பவளக்காளி அலங்காரம் வேடமணிந்து அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை (மாா்ச் 29) கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.