விஷம் சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு
துறையூா் அருகே விஷம் சாப்பிட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி மகன் விஜயராகவன் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சலுக்குள்ளாகி மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளாா்.
இந்த நிலையில், அண்மையில் அவா் விஷம் சாப்பிட்டு உயிருக்குப் போராடினாராம். அவரை மீட்ட உறவினா்கள் முதலில் துறையூரிலும், பின்னா் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.