பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்சியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்றனா். இந்தப் பொதுக்கூட்ட நிகழ்வுகளை நாளிதழ் ஒன்றின் புகைப்படக்காரராகப் பணியாற்றும், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சு. சுந்தா் (44) படம் எடுத்துக் கொண்டிருந்தாா்.
கூட்டம் குறைவாக இருந்த பகுதிகளில் அவா் படங்கள் எடுத்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா் அவரைப் படம் எடுக்கக் கூடாது எனக்கூறி தாக்கினராம். பின்னா் சக பத்திரிகையாளா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்தியதாக அடையாளம் தெரியாத பாஜகவைச் சோ்ந்த 10 போ் மீது திருச்சி கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.