தொடர் கொலைகள் முதல் சவுக்கு சங்கர் விவகாரம் வரை; சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் தடும...
ஏப்ரல் முதல் விலை உயரும் கார்கள்!
புதுதில்லி: அதிகரித்து வரும் உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது. இந்த விலை உயர்வானது கார் நுகர்வோரை வெகுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு பயணிகள் வாகன முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி இந்தியா ஏப்ரல் முதல் தனது அனைத்து ரக வாகனங்களின் விலையையும் 4 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று மாருதி வாகனங்களின் தனது எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.4.23 லட்சம் முதல் ரூ.29.22 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஏப்ரல் முதல் தங்கள் வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோன்று, இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ், இந்த ஆண்டு அதன் மின்சார வாகனங்கள் உள்பட அதன் அனைத்து பயணிகள் வாகனம் வரை இரண்டாவது முறையாக விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஏப்ரல் முதல் தனது எஸ்யூவி மற்றும் வா்த்தக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளையில் கியா இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, ரெனால்ட் இந்தியா மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் முதல் வாகனங்களின் விலையை உயர்த்துள்ளதாக அறிவித்துள்ளன.
இது குறித்து டெலாய்ட் பார்ட்னர் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறை தலைவர் ரஜத் மகாஜன் தெரிவித்ததாவது:
கார் தயாரிப்பாளர்கள் வழக்கமாக இந்தியாவில் இரண்டு முறை விலை உயர்வை அறிவிக்கின்றனர். முதலாவதாக ஆண்டின் தொடக்கத்திலும் மற்றொன்று நிதியாண்டின் தொடக்கத்திலும் அறிவிக்கின்றன.
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலர், கிட்டத்தட்ட 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இது உள்ளீட்டு செலவுகளில் நேரடி அல்லது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல் முறையாக வாகனம் வாங்குபவர்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களிடமிருந்து தொடக்க நிலை வாகனங்களுக்கான தேவை குறைந்து வருவதாக தெரிகிறது. இது நிறுனத்தின் லாபத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பிரீமியம் பிரிவுகளில் விலை உயர்வு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
அதே வேளையில் கார்களில் இணைக்கப்படும் அம்சங்களின் எண்ணிக்கையும் கடந்த சில காலாண்டுகளாக உயர்ந்து வருவதால், இது போல உயர்வுகளும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்றார்.
இதையும் படிக்க: சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரம் இறக்குமதி!