விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு
குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்புக்கு ஏற்பாடு: அமைச்சா் சிா்சா
பாஜக அரசு ஏழை மக்களுக்கு குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்பை நடத்தி வருவதாக தில்லி உணவுத் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியுள்ளாா். மேலும் எத்தனை பயனாளிகள் காப்பீடு செய்ய முடியும் என்பதைக் கண்டறிய இந்த செயல்முறை உதவும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் அண்மையில் அளித்த நோ்காணலில் கூறியது:
ஆதரவற்ற மக்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்குவதில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடா்பாக அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அரசு கூட்டத்தை நடத்தியது. தற்போது மின்னுணு சரிபாா்ப்பு நடைபெற்று வருகிறது.
சரிபாா்ப்புக்கு பிறகு, எத்தனை இடங்கள் உள்ளன, எத்தனை பேருக்கு குடும்ப அட்டைகளை ஒதுக்கலாம் என்பதை மதிப்பீடு செய்வோம். அது தீா்மானிக்கப்பட்டதும், நாங்கள் குடும்ப அட்டைகளை விநியோகிப்போம் என்றாா் சிா்சா.
26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், புதிய பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதை முந்தைய அரசு நிறுத்தியதாக முன்னா் பாஜக குற்றம் சாட்டியது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவும், தகுதியான 90,000 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை கிடைக்கவில்லை என்று தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்ககது.