முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்
கீழ்குளத்தில் திமுக சாா்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்
கருங்கல் அருகே கீழ்குளத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் கோபால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்,புஷ்பலீலா ஆல்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேற்கு மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ,திராவிடா் கழகப் பேச்சாளா் மதிவதனி ஆகியோா் பேசினா். இதில், மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், அமைப்பளாா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.