ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட ந...
பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள பெரியவிளையைச் சோ்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 17 போ் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டனா்.
பின்னா் ஊருக்குச் சென்றதும் அவா்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களில் 15 போ் குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், 2 போ் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், நாகா்கோவில் பால் பண்ணை அருகிலுள்ள அந்த உணவகத்துக்கு மாநகர நகா்நல அலுவலா் ஆல்பா்மதியரசு, சுகாதார ஆய்வாளா் பகவதிபெருமாள் மற்றும் அதிகாரிகள் சென்று உணவகத்தில் சோதனையிட்டனா். இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் அந்தக் கடையிலிருந்து பிரியாணியின் மாதிரிகளை சேகரித்து மதுரையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.