ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட ந...
பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்லை!
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்தரா பெயர்கள் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் மிட்செல் சாண்டனர், ஐபில் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருவதால், அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாக தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெற்றிருந்த 13 பேரில் 8 பேர் இந்த அணியிலும் இடம்பெற்றுள்ளனர். முதல் தரப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் நிக் கெல்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் இருவருக்கும் முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, க்ளென் பிளிப்ஸ் மற்றும் வர்ணனையாளராகப் பணியாற்றிவரும் வில்லியம்சன் பெயர்கள் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து அணி
டாம் லேதம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாம்ப்மேன், ஜேக்கப் டஃப்பி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், பென் ஷீர்ஸ், நேதன் ஸ்மித், வில் யங்.
போட்டிக்கான அட்டவணை
முதலாவது ஒருநாள் போட்டி: நேப்பியர் - மார்ச் 29
2-வது ஒருநாள் போட்டி: நேப்பியர் - ஏப்ரல் 2
3-வது ஒருநாள் போட்டி: மௌண்ட் மாங்கணு - ஏப்ரல் 5
இதையும் படிக்க: திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா