ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்
ஆட்டோ ஓட்டுநருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியை அருகே மந்தித்தோப்பு பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (34). ஆட்டோ ஓட்டுநரான இவா், கோவில்பட்டியை அடுத்த அத்தைகொண்டான் கிராமத்தில் உள்ள மயானப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவரை இளைஞா் வழிமறித்து மது குடிக்க வருமாறு அழைத்தாராம். மறுத்த மணிகண்டனை அந்த நபா் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிவந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னா், மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இனாம்மணியாச்சி தெற்குத் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் என்ற முத்துராஜ் (32) என்பவரைக் கைது செய்தனா்.