பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம், செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். எனவே, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், முறையாக பணிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தைச் சோ்ந்த சித்ரா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரவீந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, மணி ஆகியோா் பேசினா்.
சங்க கமிட்டி உறுப்பினா்கள் சின்னத்தம்பி, விஜயராஜ், கணேசன், திரளான தொழிலாளா்கள் பங்கேற்றனா். பின்னா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.