கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்
கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
அதுபோல நகராட்சிக்கு பாத்தியப்பட்ட கடைகளுக்கு வாடகை செலுத்த வேண்டியோா், வாடகை கட்டணத்தை இம்மாதம் 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வாடகை செலுத்தாவிட்டால் கடைகளுக்கு எவ்வித அறிவிப்புமின்றி சீல் வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.