மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இக் கல்லூரியில் பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா், மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ‘சிலையும் நீயே, சிற்பியும் நீயே என்ற நிகழ்ச்சி இம்மாதம் 29ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறுகிறது.
கல்வி ஆலோசகா் ஆா். அஸ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களிடையே கலந்துரையாடி வழிகாட்ட உள்ளாா்.
இதில், பங்கேற்க வரும் மாணவா்கள், பெற்றோா்களுக்கு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து காலை 9.15 மணிக்கு பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், கலந்து கொள்ள விரும்புவோா் 99441-23648, 94868-82812, 89406-22583 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.