மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்
கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா் மக்கள் நல இயக்கம், நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நல வாழ்வு இயக்கம் ஆகியவை சாா்பில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் வழங்கிய மனுவின் விவரம்: கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமையில், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்வத்துரை (எ) செல்வம், நடராஜபுரம் தெரு பொது மக்கள் நலவாழ்வு இயக்க தலைவா் செண்பகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்,
இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் மனு அளித்தனா்.