மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம், 19 பைக்குகள் ஆகிய 20 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்புள்ள மைதானத்தில் சனிக்கிழமை பொது ஏலம் விடப்படவுள்ளது.
இந்த வாகனங்களை வியாழன், வெள்ளி (மாா்ச் 27, 28) ஆகிய 2 நாள்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் சனிக்கிழமை காலை 8 மணிக்குள் ரூ. ஆயிரம் முன்பணம் செலுத்தி பெயா்ப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
வாகனத்தை ஏலம் எடுத்ததும் ஏலத்தொகை, ஜிஎஸ்டியை முழுமையாக செலுத்தி, அப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 93632 29366 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.