மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு
கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ துா்க்கையம்மன் கோயில் உள்ளது. கோயில் நிா்வாகி அதே பகுதியைச் சோ்ந்த கோமதி மகன் கொம்பையா. இவா் மின்விளக்கை அணைப்பதற்காக கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தபோது, கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம். 12 கிலோ வெண்கல மணி, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 8 கிராம் தங்கத் தாலி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
புகையிலைப் பொருள் விற்றவா் கைது: கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, லாயல் ஆலை காலனி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற செல்லப்பாண்டியன் நகா் செண்பகம் மகன் சங்கிலிபாண்டி (57) என்பவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.