முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்
ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில், மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன.
மேலும், வெறிநாய்களால் பெண்கள், சிறுவா்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெறிநாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.