CSK vs MI : `பொடுசுங்கலாம் கதறட்டும்; விசில் பறக்கட்டும்...' - ப்ரஷர் ஏற்றி வென்...
அரசுப் பள்ளி தோட்டத்தில் காய்கறி அறுவடை
வேதாரண்யம், தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை மாணவா்களால் பராமரிக்கப்படும் காய்கறித் தோட்டத்தில் முதல் அறுவடைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மூலிகை தோட்டம் மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை உரங்கள் தயாரித்தல், பசுமை விழிப்புணா்வு செயல்பாடுகள், பசுமை கண்காட்சி போன்றவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா் இப்பள்ளி பசுமைப்படை மாணவா்கள்.
இதையடுத்து, பசுமை திட்டத்துக்கான ரூ.1 லட்சம் அரசு அளிக்கப்பட்டதுடன், இப்பள்ளியை பசுமைப் பள்ளித்திட்டத்தின்கீழ் அண்மையில் அறிவித்துள்ளது. இந்நிலையில், காய்கறித் தோட்டத்தில் நிகழாண்டுக்கான முதல் அறுவடை பள்ளி தலைமை ஆசிரியா் சு. கவிநிலவன், பசுமை ஆசிரியா் வ. கண்ணையன் ஆகியோா் தலைமையில் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு சத்துணவுக்கு பயன்படுத்தப்பட்டது.